சுங்கச்சாவடியில் இனி இந்த வாகனங்களுக்கு இலவசம் என அரசு அதிரடி உத்தரவு

சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகள் வரைய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை நீக்குவதற்காக பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே ரீசார்ஜ் செய்து வைத்திருக்கும் அக்கவுண்ட்டில் இருந்து நீங்கள் வாகனத்தில் சுங்கச்சாவடியை கடக்கும் போது பணம் பிடித்தம் செய்யப்படும்.

சுங்கச்சாவடியில் பலரும் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடாது என்பதற்காகவும் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகனங்கள் காத்திருக்காமல் இருப்பதை உறுதி செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, டோல் கேட்டின் இரு புறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் நிற கோடு வரை உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த கோட்டை தாண்டி நிற்கும் வாகனங்கள் அனைத்தையும் இலவசமாக சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கட்டணம் கிடையாது.

அதைப் போன்று சுங்கச்சாவடியை கடக்கவும், சுங்கச்சாவடி தடை கம்பியை உயர்த்தவும் 10 விநாடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாஸ்டேக் என்பது தானியங்கி முறையில் இயங்குவதால் மஞ்சள் கோட்டு முறையை நடைமுறைப்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் கட்டணம் இல்லை என்று நாம் கடக்கும் போது பாஸ் டேக்கிலும் பணம் பிடித்தம் செய்யப்படாமல் இருக்குமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்