செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி மையம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் பொழிச்சலூர் ஊராட்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு/ இ. கருணாநிதி MLA
தலைமையில்
புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்,திரு/
த. ஜெயக்குமார் முன்னிலையில் பொழிச்சலூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் (27/05/21) நேற்று 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மேற்பார்வையில் செவிலியர்கள் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிட்லபாக்கம் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் சிவகுமார்,கிராம ஊராட்சி அலுவலர் கார்த்திக்,
பொழிச்சலூர் ஊராட்சி மன்ற செயலர் பொற்கொடி, பொழிச்சலூர் கிளைச் கழக செயலாளர்கள் , நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

S. முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்