தீவிர சமூக பணிகள்
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ள நிலையில், சாலையோர மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதை கண்டறிந்த சில தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து உணவுகள் வழங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தென் சென்னை மேற்கு தி. நகர் பகுதி நிர்வாகிகள் பசியால் வாடும் சாலையோர ஏழைகளுக்கு பசியை போக்க தொடர்ந்து 8 நாட்களாக 150 நபர்களுக்கு இரவு உணவு தண்ணீர் பாட்டிலுடன் விநியோகம் செய்து வருகின்றனர்.
செய்தியாளர்
அ.காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்