போலீஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு நேற்று காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஏற்கனவே 2 கட்ட கொரோனா தடுப்பூசி போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
கன்னியாகுமரி மாவட்ட நிருபர்
சதீஸ் குமார் தி