தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். வரும் மார்ச் 30-ந் தேதி வரை இத்தகைய வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது