சீமானுக்கு சம்மன் – நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து வெளியே வந்த சீமான், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பெரியார் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் விவாதத்தை கிளப்பியது. பல்வேறு தரப்பினரும், பெரியார் குறித்து சீமான் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கண்டனம் தெரிவித்தனர். பெரியாரிய கூட்டமைப்பினர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றனர். சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், கடலூர் காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பி, 14ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.