முதல்வர் ஸ்டாலின் உரை

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பார்லிமென்டில் எம்.பி.,க்கள் பேசினர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளித்தனர். அப்போது நான் சட்டசபையில் பேசும்போது, மக்களால் ஆட்சியில் இருக்கும் நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் வராது. அது பற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை. அப்படிவந்தால் பதவியில் இருக்க மாட்டேன்’, எனச்சொன்னேன்.எனக்கு பாராட்டு தெரிவிப்பதை விட, உங்களுக்கு பாராட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ” திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் என்றும் ஆதரவு தர வேண்டும்,” என அரிட்டாபட்டியில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply