கவிஞர் வைரமுத்து
திருக்குறளுக்கு தற்போது புதிய உரை எழுத தொடங்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து. திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கிவிட்டேன். அதற்கான சில மூல உரைகளை தற்போது எழுதி கொண்டு இருக்கிறேன். திருக்குறளின் மூலத்திற்கும் திருவள்ளுர் காலத்திற்கும் மெய்யோடிருத்தல் வேண்டும்; அறத்துப்பாலும் பொருட்பாலும் அறிவுப் பொருளாகத் திகழ வேண்டும்; காமத்துப் பால் கவிதைப் பொருளாக விளங்க வேண்டும். மூலத்தின் அறிவும் செறிவும் விரிவும் ஓசை நயத்தோடு துலங்க வேண்டும்; எவ்வளவு இயலுமோ அவ்வளவு தனித்தமிழே ஆளப் பெறுதல் வேண்டும்; என தெரிவித்துள்ளார்.