வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்றிரவு தம்புல்லாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரொவ்மென் பவேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் அசலங்கா 59 ரன் அடித்தார்

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பிரான்டன் கிங் 33 பந்துகளில் 63 ரன்களும், ஈவின் லீவிஸ் 28 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்து அவுட்டாகினர். இதையடுத்து நிதானமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ராஸ்டன் சேஸ் 19 ரன், ஷாய் ஹோப் 7 ரன், ரோவ்மன் பாவல் 13 ரன், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 14 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.