சென்னையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக 35 விமானங்களின் சேவை
சென்னையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, ஐதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூர் செல்லும் உள்நாட்டு விமானங்கள் தாமதம். சென்னையில் இருந்து சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்களும் 2 மணி நேரம் தாமதமாக சென்றன. கனமழை மற்றும் இடி, மின்னல் காரணமாக சென்னையில் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.