ராசி பலன்கள்

🌴மேஷம்🦜🕊️

செப்டம்பர் 19, 2024

தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். எதையும் பகுத்தறிந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை பணிகளில் பொறுமை காக்கவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கும் மேம்படும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : பொறுமை வேண்டும்.

கிருத்திகை : நெருக்கும் மேம்படும்.

🌴ரிஷபம்🦜🐄

செப்டம்பர் 19, 2024

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்புக்கு உண்டன பாராட்டுகள் கிடைக்கும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட கவனம் ஏற்படும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : அனுகூலம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

🌴மிதுனம்🦜🕊️

செப்டம்பர் 19, 2024

கல்வியில் இருந்த மந்த தன்மை குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மிருகசீரிஷம் : மந்த தன்மை குறையும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.

புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

🌴கடகம்🦜🕊️

செப்டம்பர் 19, 2024

கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். சுப காரியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : வருத்தங்கள் நீங்கும்.
பூசம் : ஆர்வம் ஏற்படும்.

ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.

🌴சிம்மம்🦜🕊️

செப்டம்பர் 19, 2024

இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். புதிய உணவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொன் பொருள்களில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மகம் : குழப்பங்கள் நிங்கும்.
பூரம் : தாமதம் ஏற்படும்.

உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.

🌴கன்னி🦜🕊️

செப்டம்பர் 19, 2024

சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

உத்திரம் : புரிதல்கள் மேம்படும்.
அஸ்தம் : அறிமுகங்கள் ஏற்படும்.

சித்திரை : ஒத்துழைப்பான நாள்.

🌴துலாம்🦜🕊️

செப்டம்பர் 19, 2024

கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் செல்ல நேரிடும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். ஆலோசனை கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சித்திரை : வித்தியாசமான நாள்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.

விசாகம் : புதுமையான நாள்.

🌴விருச்சிகம்🦜🕊️

செப்டம்பர் 19, 2024

உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் வருமானம் அதிகரிக்கும். அறிவுத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்கால துறைகளில் நிபுணத்துவம் வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
அனுஷம் : மாற்றமான நாள்.

கேட்டை : நிபுணத்துவம் வெளிப்படும்.

🌴தனுசு🦜🕊️

செப்டம்பர் 19, 2024

ஆன்மீக பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மூலம் : செல்வாக்குகள் அதிகரிக்கும்.
பூராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

உத்திராடம் : விவேகம் வேண்டும்.

🌴மகரம்🦜🕊️

செப்டம்பர் 19, 2024

கல்வி சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் நிமித்தமான போட்டிகள் விலகும். பாசம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.

அவிட்டம் : போட்டிகள் விலகும்.

🌴கும்பம்🦜🕊️

செப்டம்பர் 19, 2024

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் மேம்படும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : ஆதாயம் மேம்படும்.
சதயம் : ஆரோக்கியம் மேம்படும்.

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

🌴மீனம்🦜🕊️

செப்டம்பர் 19, 2024

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய வாய்ப்புகளில் சிந்தித்து செயல்படவும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம்
உத்திரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
ரேவதி : சோர்வுகள் நீங்கும்.