டாக்டர் காந்தராஜ் மீது வழக்குப் பதிவு
தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி கொடுத்த புகாரின் அடிப்படையில் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.