வடகிழக்கு பருவமழை: தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் துறை செயலாளர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.