சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 22% உயர்த்தியது ஒன்றிய அரசு
சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி கடுமையாக உயர்ந்துள்ளது. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியது. சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 5.5%லிருந்து 27.5%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி உயர்வு இன்று முதலே அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரி ஒரே நாளில் 20% உயர்த்தப்பட்டதால் வணிகர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.