கல்லூரிகளில் சானிட்டரி நாப்கின் எந்திரங்கள்

கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் முழுமையாக செயல்படுகிறது என கல்லூரி கல்வி இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அரசு கல்லூரிகளில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் சானிட்டரி நாப்கின் எந்திரங்கள் பராமரிப்பின்றி இருப்பதாக நாளிதழ் செய்தி வெளியான நிலையில், நாளிதழ் செய்தி அடிப்படையில் ஐகோர்ட் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது