கேரளாவிலிருந்து மீன் மற்றும் இறைச்சிக் கழிவுநீரை

கேரளாவிலிருந்து மீன் மற்றும் இறைச்சிக் கழிவுநீரை கொண்டு வந்து பொள்ளாச்சி சாலையில் கொட்டிய லாரி சிறைபிடிக்கப்பட்டுள்ளது. மீன்கள் கெட்டு போகாமல் இருக்க ஐஸ் கட்டிகளை வைத்து மீன்களை பதப்படுத்தி லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதிக்கு லாரி வந்த போது அதிக வெப்பத்தால் ஐஸ் கட்டி உருகியதால் லாரியை நிறுத்தி மீன் கழிவு நீரை ஓட்டுநர் திறந்துவிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

இது தொடர்பாக அப்பகுதியை சார்ந்த கிராமமக்கள் உடனடியாக லாரியை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.இது போன்று 3 முறை மீன் கழிவுகள் கொட்டப்பட்டதாக கிராமமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் ஓட்டுநர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் அப்பகுதிமக்கள் தெரிவித்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடிய பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர். வாகனத்தின் மீது 50ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.