அரசு சாரா அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு தடை

அரசுப் பள்ளி வளாகத்திற்குள், இனி அரசு சாரா அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். தொண்டு நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை. அரசு உத்தரவை மீறினால் தலைமை ஆசிரியருடன், முதன்மைக் கல்வி அலுவலரும் பணி இடைநீக்கம் செய்யப்படுவர் என்றும் தெரிவித்தார்.