விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போலீஸ் அனுமதி அளித்துள்ளது. சிலை வைக்கப்படும் இடங்களில் ரோந்து வாகனங்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.