குரங்கம்மை சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
குரங்கம்மை சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – வெளியிட்டது பொது சுகாதாரத்துறை.
குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது வைரஸ் தொற்று என்பதால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாகத் தொடங்கவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய அறிகுறியுடன் வரக்கூடியவர்களை தனியார் மருத்துவமனைகளும் கண்காணித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.