விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல போலீசார் அனுமதி
சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 7-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் இந்து அமைப்புக்கள் சார்பில் 1,500 பெரிய விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.