ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தை விதிமீறல்

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவருக்கு நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. 2012-ல் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றை அனுமதியின்றி மிதேயூர் கிராமத்தில் நடத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் விகார் ரசூல் வாணி, 2012-ல் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்கு தொடர்ந்தார். விகார் ரசூல் வானி உட்பட 6 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரித்தது. ரசூல் வானி, சச்சின் உட்பட 6 பேருக்கு 5 மாத சிறை தண்டனையும் தலா ரூ.1,000 அபராதமும் நீதிமன்றம் விதித்த உத்தரவிட்டது.