மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை
மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2-ஆம் கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை (43 கி.மீ.) நீட்டிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 5ஆவது வழித்தடத்தை கோயம்பேடு முதல் ஆவடி வரை (16 கி.மீ.) நீட்டிப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.