விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவு !!

மாவட்ட வாரியாக ஆய்வு செய்து விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கத்துக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில் அரக நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.