சென்னை உயர்நீதிமன்றம்

குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது:

 குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக செல்வராஜ் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து செல்வராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குண்டர்சட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.