போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் விபத்து ஏற்படும் பகுதியை தெரிவிக்க விபத்து தொடர்பான குற்றவியல் சட்ட பிரிவுகளை சாலையில் வட்ட வடிவ குறியீடாக வரைந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை முழுவதும் சுமார் 156 இடங்கள் அடையாளம் காணப்பட்டு இதுபோன்று விபத்து ஏற்படும் பகுதியில் குறியீடு மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது