சுதந்திர தின நல்வாழ்த்துகள்: ஓ. பன்னீர்செல்வம்

அடிமை விலங்கினை உடைத்தெறிந்து சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்: ஓ. பன்னீர்செல்வம்

நம் பாரத நாடு அடிமை விலங்கினை உடைத்தெறிந்து சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள் என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாருக்குள்ளே நல்ல நாடாகிய நம் பாரத நாடு அடிமை விலங்கினை உடைத்தெறிந்து சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தன்னலமற்ற தியாகிகள் பலர், எந்தவித பலனையும் எதிர்பாராமல், தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து பாரத நாடு விடுதலைப் பெற்றிட வழிவகை செய்தனர். இப்படிப்பட்ட தியாகச்சீலர்களின் அர்ப்பணிப்பினைப் போற்றி, நாடு வளம் பெற சாதி மத பேதங்களை கடந்து ஒற்றுமையுடன் அனைவரும் வாழ்ந்திட வேண்டும்.

“நாடு உனக்கு என்ன செய்தது என்பதைவிட நீ நாட்டிற்கு என்ன செய்தாய்?” என்பதற்கேற்ப பெற்ற விடுதலையை நாம் அனைவரும் பேணிக் காக்க வேண்டும்.”பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்னும் மகாகவி பாரதியாரின் பொன்மொழியைப் போற்றிப் பரப்பி, அனைவரும் உழைத்துப் பாரதம் பாரினில் சிறக்கப் பாடுபடுவோம் எனத் தெரிவித்து அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.