ஹிஜாப் அணிந்து தேர்வு
ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத மும்பை கல்லூரி விதித்த தடையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொட்டு, திலகம் வைக்க வேண்டாம் என உங்களால் கூற முடியுமா? அதற்கு தடை விதிக்க முடியுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பெயரிலேயே மதத்தை கண்டுபிடித்து விடலாமே? அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மும்பை கல்லூரியில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்ட வழக்கில் இவ்வாறு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.