ராசி பலன்கள்
🌴மேஷம்🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வழக்கு விஷயங்களில் புரிதல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : இழுபறிகள் குறையும்.
கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும்.
🌴ரிஷபம்🦜🐄
ஆகஸ்ட் 7, 2024
மற்றவர்களுக்கு கருத்து சொல்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நிமித்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
🌴மிதுனம்🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. இணைய துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருட்கள் மூலம் ஆதாயம் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
🌴கடகம்🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவுகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். முக்கிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். புதிய மனை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.
பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.
🌴சிம்மம்🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். பயணங்களின் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கப்பெறுவீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
மகம் : தீர்வு கிடைக்கும்.
பூரம் : நெருக்கம் மேம்படும்.
உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
🌴கன்னி🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
மனதில் புதுவிதமான இலக்குகளும், அதை சார்ந்த அலைச்சல்களும் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செயல்களில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : அலைச்சல் ஏற்படும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
🌴துலாம்🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். மனதில் எண்ணிய ஆசைகள் நிறைவேறும். பிற மொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருத்தலம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். நிர்வாக பணிகளில் பொறுப்பும், திறமையும் வெளிப்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.
சுவாதி : ஆசைகள் நிறைவேறும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
🌴விருச்சிகம்🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
கற்கும் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.
அனுஷம் : ஆர்வம் உண்டாகும்.
கேட்டை : துரிதம் ஏற்படும்.
🌴தனுசு🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விலை உயர்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
பூராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
🌴மகரம்🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்கள் மூலம் எதிர்பார்த்த சில ஆதாயங்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உதாசீன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவீர்கள். வேலையாட்களிடம் நிதானம் வேண்டும். சிக்கனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
உத்திராடம் : மந்தமான நாள்.
திருவோணம் : ஆதாயங்கள் கிடைக்கும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
🌴கும்பம்🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சகோதரர் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
அவிட்டம் : புரிதல் மேம்படும்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
🌴மீனம்🦜🕊️
ஆகஸ்ட் 7, 2024
உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதில் வியாபார நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
பூரட்டாதி : தாமதங்கள் குறையும்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.