வயநாடு நிலச்சரிவு..ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ராகுல் காந்தி
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தேன். நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.