முட்டை விலை 2 நாள்களில் 60 காசுகள் சரிவு
நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2 நாள்களில் மட்டும் 60 காசுகள் குறைந்து, ₹4.60ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம், வட மாநிலங்களில் முட்டை விற்பனை குறைந்ததன் காரணமாக அதிகளவில் தேக்கம் அடைந்ததாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதனால், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கொள்முதல் விலையை குறைத்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து, சில்லறை விலையும் ₹5ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது