ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள்
ஆக.4 ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு ஆக.3-ல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளத்தக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னை, சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, பெங்களூருவுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in மற்றும் tnstc app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்