மத்திய அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் இல்லை
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை என பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் இல்லை. தமிழ்நாட்டை வயிற்றில் அடித்துவிட்டு பீகாருக்கு நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. நிதி, திட்டங்கள் ஒதுக்குவதில் மாநிலங்கள் இடையே மத்திய் அரசு பாரபட்சம் காட்டுகிறது. பாரபட்சமாக நடந்து கொண்ட மத்திய அரசை இதுவரை நான் பார்த்தது இல்லை.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை மகிழ்ச்சிபடுத்தி ஆட்சியை தொடரும் முயற்சியாக பீகார், ஆந்திராவுக்கு மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி அடைந்தால்தான் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் இதுபோன்ற ஒன்றிய அரசை வரலாற்றில் பார்த்ததில்லை. சாமானிய மக்களுக்காக பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றார்