பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதி
பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை அறிவித்துள்ளது மத்திய அரசு என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வரவில்லை. மத்திய அரசு மற்ற மாநிலங்களையும் பாரபட்சமின்றி பார்க்கவேண்டும். பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது. பீகார், ஆந்திராவுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு பிற மாநிலங்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது. அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமின்றி மத்திய அரசு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்