தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது

தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் 9 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு பொறியியமாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த கலந்தாய்வை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு ஜூலை 29 முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்படுகிறது. செப்.11-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.

தமிழ்நாட்டில் 2023-24-ம் கல்வி ஆண்டில் 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் (2024-25) நடப்பு கல்வி ஆண்டில் 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் 9 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது