தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமியை காரணம்:
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமியை காரணம்: காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.
செல்வபெருந்தகை அளித்த பேட்டி:
நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சர்மா திடீரென ராஜினாமா செய்துள்ளார் அதற்கான காரணம் குறித்து பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்.ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங், இஸ்லாமியர்கள் குறித்து பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 2026ல் கூட்டணி ஆட்சி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். திமுக, காங்கிரஸ் கட்சிகள் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணம். எனினும் மக்களின் சுமையை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். திருச்சியில் மூடப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, முதலமைச்சருடன் பேசி மூன்று மாதத்தில் வேறு இடத்தில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.