கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு!
கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு!
மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது!
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பாண்டிக்காடு மற்றும் சிறுவனின் பள்ளி உள்ள அனக்காயம் கிராமங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.