தீவிரவாதிகளின் ஊடுருவல் சதி முறியடிப்பு

தீவிரவாதிகளின் ஊடுருவல் சதி முறியடிப்பு

ஜம்மு காஷ்மீரின் கேரன் செக்டார் வழியே ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் இருவரை, பாதுகாப்புப் படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

LOC அருகே ஊடுருவல் சதி நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ராணுவத்தினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது, இரு தரப்புக்கு இடையே கடும் சண்டை மூண்டது.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தான் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டதாக, ராணுவம் தெரிவித்துள்ளது.