அமமுக.வின் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
அமமுக.வின் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் வரும் 24ம் தேதி டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும்: அக்கட்சி அறிவிப்பு
அமமுக.வின் மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வரும் 24ம் தேதி டிடிவி தினகரன் தலைமையில் தேனியில் நடைபெறும் என அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிடவும், தமிழகத்தில் அம்மா பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் வருகின்ற 24.07.2024 புதன் கிழமை அன்று காலை 09.00 மணியளவில் தேனி மாவட்டம், பழனிச்செட்டிப்பட்டியில் அமைந்துள்ள சந்திரபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக அமைப்பு செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், கழக தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநில கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.