வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு, கேரள எல்லையிலும் மழை பெய்து வருகிறது. அத்துடன், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நீலகிரி, கோவை, மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
அதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், கேரளாவில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது