நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர் வர தொடங்கியது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1502 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.