திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க நில எடுப்பு பணிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க நில எடுப்பு பணிகள் தொடங்கியது. எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிபேட்டை, எர்ணாங்குப்பம், மேல்மாளிகைப்பட்டு போன்ற பகுதிகளில், சுமார் 1703 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரம் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அறிவுசார் நகரத்துக்கான நில எடுப்பு பணிகளுக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள், அறிவுசார் தொழிலகங்கள் நவீன நகரத்தில் அமைக்கப்படும். மேல்மாளிகைப்பட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை உள்ளவர்கள் மாநெல்லூர் சிப்காட் தொழிற்பூங்கா மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கலாம். ஆட்சேபனை மனு குறித்து ஆகஸ்டு 22-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.✳️✳️