சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல்

மதுரை காமராஜர் பல்கலை.யில் கண்ணன், தர்மராஜ் ஆகியோரின் சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோனிராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் பதவி உயர்வில் விதிமீறலுக்கு உள்ளான தர்மராஜ், கண்ணன் சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது