ஆருத்ரா கோல்டு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி
ஆருத்ரா கோல்டு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.141.29 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆருத்ரா கோல்டு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் போலீஸ் பதில்மனு தாக்கல் செய்தது. 2021 முதல் தற்போது வரை மொத்தமாக 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட 1,524 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.180.70 கோடி முடக்கம் செய்யப்பட்டது. மோசடி செய்த நிதி நிறுவனங்களின் ரூ.1,118.46 கோடி மதிப்புள்ள 3,264 அசையும் சொத்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிய உரிமையாளர்கள், இயக்குநர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி தேடி வருகிறோம். சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வாதம் வைத்து வருகின்றனர்