நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்

நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் அம்மாவட்டத்தில் 21 செ.மீட்டருக்கு மேல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, ஊட்டி, கூடலூர், மஞ்சூர், தேவாலா ஆகிய பகுதிகளில் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்