காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டி என அறிவிப்பு
டெல்லியில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தேவேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ஆம் ஆத்மியுடன் கூட்டணியமைத்தது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும்தான் என்றார்.
மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்