அனிபால் கென்னடி அவர்கள் ஆய்வு
ரூ.4½ கோடியில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்:
புதுச்சேரி முகத்துவாரம் பகுதியில் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால் மணல் தேங்கி உள்ளது. இதனால் மீன்பிடி விசைப்படகுகள் கடலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி மணல் திட்டுகளில் விசைப்படகுகள் சிக்கி சேதமடைந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து துறைமுக முகத்துவார பகுதியில் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ரூ.4.50 கோடியில் இந்த பகுதியில் 4.50 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக 60 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணல் அங்கிருந்து தூர்வாரப்படுகிறது. இதற்காக டிரெட்ஜிங் எந்திரம் (தூர்வாரும் எந்திரம்) புதுவைக்கு கொண்டு வரப்பட்டது, இதனை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் துறைமுக செயற்பொறியாளர் விஜயகுமார் அவர்களுடன் சேர்ந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் துறைமுக செயற்பொறியாளர் விஜயகுமார் அவர்களுடன் பேசுகையில், முகத்துவாரப் பகுதியில் தூர்வாரKSR என்ற நிறுவனம் பணி செய்தது. 7 லட்சம் கியூபிக் மீட்டர் மண் அள்ள ஒப்பந்தம் போடப்பட்டது.ஒப்பந்தம் போடப்பட்டபடி மண் அள்ளவில்லை.Booster எனப்படும் மண் அளவிடம் கருவி வைக்கப்பட வில்லை. பின்னர் எப்படி மண் அள்ளுவதைக் கணக்கிட முடியும்.
2 ட்ரஜர் மெஷின் கொண்டு மண் அள்ள வேண்டும்.
1 மிஷின் தான் மண் அள்ளியது.
சுமார் 4 இலட்சம் மண் தான் அள்ளி இருப்பார்கள்.ரூபாய் 24 கோடி கொடுத்து விட்ட பிறகு அதற்கான வேலை நடைபெற வில்லை. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருத்த ஊழல் நடைப்பெற்று உள்ளது.சிபிஐ விசாரணைக்கு உத்தரவு இட வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை தேவை. கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் உடனடி நடவடிக்கை தேவை என்று சட்ட மன்றத்தில் பேசி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவர்கள் தான் மக்களை ஏமாற்றி சென்று விட்டார்கள் இப்பொழுது ரூ.4½ கோடியில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி செய்யும் IIT நிறுவனம் தவறு செய்யாமல் அவர்கள் பணியினை முழுமையாக செய்தவதை கண்காணிப்பு செய்யுங்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் துறைமுகத்தில் உடைந்த பழையப் பாலம் புனரமைப்பு பற்றி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பேசுகையில், 1 கிலோ மீட்டர் அளவில் பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டது, சொகுசு கப்பல் பயணம் செய்யும் வகையில் திட்டங்கள் குறித்து அரசுக்கு அனுப்பிவைக்க பட்டுள்ளது அதுவும் அரசு செயல்முறையில் உள்ளது என்று அதிகாரி தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து எக்ஸ்போ மைதானம் உள்ளே அமர்ந்து இருக்கும் சுற்றுலா பயணிகள் படகு இருக்கும் இடத்தில் மின் விளக்கு அமைத்து கொடுக்கும் படி சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கேட்டுக் கொண்டார் மேலும் துறைமுகம் சீரமைத்து கடலைநம்பி வாழும் மீனவமக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டும் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும் .அனைத்து விதமான கப்பல்களும் தங்குதடையின்றி புதுச்சேரி உப்பளம் துறைமுகத்திற்கு வந்து செல்ல வேண்டும். சுற்றுலா தளமாகவும் அமைந்திட வேண்டும்.இந்த துறைமுக மேம்பாட்டு பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டு அரசுக்கும் வருவாய் ஈட்டித் தரவேண்டும்.என்று அனைத்து விதமான கோரிக்கைகளையும் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.அவருடன் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.