பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஸ்ரீ.மஹாமாரியம்மன் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.மஹாமாரியம்மன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினர். அதன் பின்னர் காலை 11.45 மணியளவில் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்