சென்னை மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 160 நட்சத்திர ஆமைகள்

சென்னை மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 160 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சதுப்பு நிலம் பகுதியில் இருந்து ரூ.100-க்கு வாங்கி மலேசியாவில் ரூ.5,000-க்கு ஆமையை விற்க இருந்தது. நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற சென்னையைச் சேர்ந்த பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த நட்சத்திர ஆமைகளை கிண்டி பூங்கா அல்லது வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.