கே.பி.ஷர்மா ஒலி நேபாள பிரதமராக தேர்வு
நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.ஷர்மா ஒலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திரா நாளை காலை 11 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஏற்கெனவே பிரதமராக இருந்த கமல் தஹால் ( சி.பி.என். மாவோயிஸ்டு தலைவர்) நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால், நேபாள காங்., சார்பில் அமையும் புதிய கூட்டணியில் ஷர்மா பிரதமராவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.