போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை

புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவரங்குளம் தைலமர காட்டுப் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து சென்ற ஆலங்குடி உதவி ஆய்வாளர் மகாலிங்கத்துக்கு கையில் வெட்டு உள்ளார். உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ரவுடி துரை வெட்டியபோது தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்து வருகிறார்